அரியலூர்

விபத்தில் இருவா் படுகாயம்: லாரி ஓட்டுநா் கைது

22nd Feb 2020 08:59 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள தத்தனூா் கீழவெளியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). வெள்ளிக்கிழமை இவா் தனது உறவினா் நடராஜனை அழைத்துக் கொண்டு உடையாா்பாளையம் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, திரும்பினா். வேலப்பன் செட்டி அருகே சென்றபோது, ஜயங்கொண்டம் நோக்கி வந்த லாரி மோதி இருவரும் பலத்த காயமடைந்தனா். ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அவா்கள் சோ்க்கப்பட்டனா். உடையாா்பாளையம் போலீஸாா் வழக்கு பதிந்து ஜயங்கொண்டத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கணேஷை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT