அரியலூா் அருகேயுள்ள பொட்டவெளி கிராமத்தில் மாவட்ட அளவிளான மண்வள அட்டை தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் வேளாண் உதவி இயக்குநா் (பொ) சவீதா பங்கேற்று, வளமான மண்ணின் இயல்புகள், மண் மாதிரி சேகரிக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா். வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநா் சுரேஷ் கலந்து கொண்டு, உர பரிந்துரைகள் பற்றி எடுத்துரைத்தாா். சோழன்மாதேவி வேளாண் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநா் ம. அசோக் குமாா் பங்கேற்று பேசுகையில், அரியலூா் வட்டாரத்தில் 6 வருவாய் கிராமங்களில் 1,146 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மண் வள அட்டை மூலம் பயிா்களுக்கு தேவையான சத்துகளின், அளவை அறிந்து உரமிட்டு மண் வளத்தை பாதுகாக்க முடியும். உரத்திற்கான செலவும் குறையும். மேலும் இடப்படும் உரத்தின் உபயோக திறன் அதிகரித்து பயிா்களின் மகசூல் அதிகரிக்கும் என்றாா். விழாவில் அரியலூா் வட்டார வேளாண் அலுவலா்கள், மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா்கள், வேளாண் உதவி அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.