அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ப.சுமதி கலந்து கொண்டு காவலன் செயலி குறித்தும், இந்தச் செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கும் வழிகள் குறித்தும் விளக்கினாா். மேலும், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளித்தல் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், குழந்தைகள் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டால், அவா்களை மீட்பது குறித்தும் எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில், கீழப்பழுவூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அமரஜோதி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.