அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள காா்குடி கிராமத்தில் தாா்ச் சாலைகள் முற்றிலும் கற்கள் பெயா்ந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்தச் சாலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கீழே சறுக்கி விழுந்து காயத்துடன் திரும்பும் நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மற்றும் தா.பழூா் ஊராட்சி ஒன்றியத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.