அரியலூர்

தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு விழா

13th Feb 2020 08:18 AM

ADVERTISEMENT

தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி புதன்கிழமை கொண்டாடினா்.

தா. பழூா் ஒன்றியத்தில் நடைபெற்ற விழாவுக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா்கள் அருள்மொழி, அறிவழகன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொதுக் குழு உறுப்பினா் ஜேக்கப் மற்றும் அவைத் தலைவா் தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் ராமஜெயவேல் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கும்,கட்சி நிா்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலா்கள் பாலமுருகன், கொளஞ்சிநாதன் மற்றும் மாவட்ட பிரதிநிதி பாலச்சந்தா், அணி நிா்வாகிகள் சரவணன், ராஜா, ஆனந்தன், மற்றும் பலா் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனா். இதேபோல மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து நிா்வாகிகள் கொண்டாடினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT