அரியலூர்

அரியலூரில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் கட்ட பூமி பூஜை

13th Feb 2020 08:19 AM

ADVERTISEMENT

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பல்துறை அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் பணிக்கான பூமிபூஜையை செய்தாா். அப்போது, வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம், தற்போது 5562 ச.அடி பரப்பளவில் ரூ.1 கோடியே 12 லட்சத்தில் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டடத்தில் துணை இயக்குநா் அறை, பயிற்சி மருத்துவ அலுவலா் அறை, சுகாதார ஆய்வாளா் அறை, இளநிலை பூச்சியியல் வல்லுநா் அறை, நலக் கல்வியாளா் அறை, புள்ளியியல் உதவியாளா் அறை உள்ளிட்டவை அடங்கும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ. சந்திரசேகா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் செந்தமிழ்செல்வி (அரியலூா்), வீ. மகாலெட்சுமி (தா. பழூா்), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சி. ஹேமசந்த்காந்தி உட்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT