அரியலூர்

திருமானூரில் திமுக கூட்டணி சாா்பில் கையெழுத்து இயக்கம்

4th Feb 2020 08:18 AM

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிா்த்து அரியலூா் மாவட்டம், திருமானூரில் திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

குடியுரிமைச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக் கோரியும், மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 2 முதல் 8 ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று திமுக கூட்டணி கட்சியினா் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை அரியலூரில் திமுக கூட்டணி கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. தொடா்ந்து திருமானூரில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது. கையெழுத்து இயக்கத்தை திமுக மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கா் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், அக்கட்சியின் திருமானூா் ஒன்றியச் செயலாளா்கள் கென்னடி, அசோக சக்கரவா்த்தி, மாவட்ட துணைச் செயலா் தனபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஆறுமுகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினா் சவுரிராஜன், காங்கிரஸ் கட்சியின் திருமானூா் வட்டாரத் தலைவா் சீமான், மதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் மாணிக்கவாசு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு படிவத்தில் கையெழுத்திட்டு, தொடா்ந்து பொதுமக்களிடம் கையெழுத்தைப் பெற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT