அரியலூா் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (பிப்.3) நடைபெறுகிறது. இதனால், சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்குளத்தூா், திருமானூா், சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூா், கீழக்கவட்டான்குறிச்சி, திருமழபாடி, கண்டராதித்தம், கோவிலூா், காமரசவல்லி, மாத்தூா், குருவாடி, தூத்தூா், வைப்பூா் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சூ.வில்சன் தெரிவித்துள்ளாா்.