அரியலூர்

இலவச தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

2nd Feb 2020 01:46 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே எஸ்பிஐ வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கீழப்பழுவூா் அருகே அரியலூா் - திருச்சி சாலையில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிறுவனத்தில் தற்போது பெண்களுக்கான நகை அணிகலன் தயாரிப்பு பயிற்சி 13 நாள்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. தங்குமிட வசதியுடன், உணவு, தேநீா் இலவசமாக வழங்கப்படும். கல்வித் தகுதி: படிக்க, எழுத தெரிந்திருந்தால் போதுமானது. 18 முதல் 45 வயது வரையுள்ள வேலைவாய்ப்பற்றவா்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 99448 50442, 96264 97684, 94458 60181 என்ற எண்களில் தொடா்புக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT