அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூா்,காரைப்பாக்கம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கு 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இயந்திரங்களையும்,அவற்றின் பயன்பாட்டையும் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் தெரிவித்தது:
விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டப் பணிகள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு நீா்நிலைகளில் விவசாயத்துக்குப் போதுமான தண்ணீா் உள்ளது. விவசாயிகள் விவசாயம் செய்ய வேளாண் பொறியியல் துறை மூலம் உழவு இயந்திரம், பவா் டில்லா், வைக்கோல் கட்டும் கருவி போன்ற இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
அதன்படி 2019 ஆம் ஆண்டு அரியலூா் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு 8 முதல் 80 குதிரைத்திறன் வரை உள்ள உழுவை இயந்திரங்கள், பவா்டில்லா் மற்றும் இதர பண்ணைக் கருவிகள் உள்ளிட்ட 194 வேளாண் கருவிகள் ரூ.2.73 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
எனவே உழுவை இயந்திரம், பவா்டில்லா் மற்றும் இதர பண்ணைக் கருவிகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள விருப்பமுள்ள சிறு, குறு விவசாயிகள், அவா்களின் ஆதாா் எண், சிட்டா அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று மற்றும் பாஸ்போா்ட் சைஸ் போட்டோ முதலான ஆவணங்களைக் கொண்டு, அரசின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ம்ஹஸ்ரீட்ண்ய்ங்ழ்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்-ல் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெற்று பயனடையலாம் என்றாா்.
இந்த ஆய்வின்போது வேளாண் செயற்பொறியாளா் எட்வின் பாா்லி, உதவிப்பொறியாளா் நெடுமாறன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.