அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையத்துக்குட்பட்ட காடுவெட்டி கிராமத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் வியாழக்கிழமை இயக்கி வைத்தாா்.
அக்கிராம மக்கள் பாதுகாப்புக்காக ஊராட்சித் தலைவா் ரவி சாா்பில் பொருத்தப்பட்ட 24 கண்காணிப்பு கேமராக்களை மீன்சுருட்டி காவல் நிலையத்தில் இருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் இயக்கி வைத்து, அனைத்து சம்பவங்களும் 24 மணிநேரமும் காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும் என்றாா். நிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். காவல் நிலைய ஆய்வாளா் மலைச்சாமி முன்னிலை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து அவா், ஜயங்கொண்டம் அண்ணாசிலை அருகே காவல் துறை மற்றும் பொதுமக்கள் சங்கம் சாா்பில் பொருத்தப்பட்ட 21 கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தாா். ஜயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி முன்னிலை வகித்தாா்.