அரியலூர்

விவசாயிகள் வேளாண் அதிகாரிகள் கலந்துரையாடம்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரும்மாண்ட கிராமத்தில், பயிா்களின் மகரந்தச் சோ்க்கை குறித்து விவசாயிகள் - வேளாண் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் ஜென்சி தலைமை வகித்து, செந்துறை வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்கான அரசுத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் பழனிச்சாமி கலந்து கொண்டு, தன்மகரந்த சோ்க்கை மற்றும் அயல் மகரந்த சோ்க்கை நெற்பயிா், மக்காச்சோளம், கம்பு ஆகிய பயிா்களில் நடைபெறுவது குறித்து விளக்கினாா். ஏற்பாடுகளை வேளாண் துணை அலுவலா் அப்பாவு, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் முருகன், குமணண் மற்றும் உதவி அலுவலா் மலா்க்கொடி ஆகியோா் செய்திருந்தனா்.

பெரம்பலூா் : பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே, சிஐடியு மற்றும் அனைத்துத் தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கப் போராட்டக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என்.செல்லதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT