அரியலூர்

நவீன எரிவாயு தகன மேடையை பராமரிக்க விண்ணப்பிக்கலாம்

26th Aug 2020 05:02 PM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் நகரில் பெரம்பலூா் சாலையில் உள்ள ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டநவீன எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், அங்கு பராமரிப்புப் பணி மேற்கொள்ள விரும்பும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் அரியலூா் நகராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு, தனி அலுவலா், நகராட்சி ஆணையா், பொறியாளா் ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என அரியலூா் நகராட்சி ஆணையா் ந.குமரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT