அரியலூர்

அரியலூரில் ரூ.2.71 கோடியில் நலத்திட்ட உதவிகள்

26th Aug 2020 05:03 PM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 31 பயனாளிகளுக்கு ரூ.5,93,200 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ரத்னா முன்னிலை வகித்தாா். அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்து, தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் 67 ஊராட்சிகளுக்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் 3-சக்கர குப்பை வண்டிகள் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும், மகளிா் திட்டம் சாா்பில் நான்கு கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.40 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களும் வழங்கினாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 5 பேருக்கு ரூ.2,92,500 மதிப்பிலான இணைப்புச் சக்கரங்களுடன் கூடிய சிறப்பு இருசக்கர வாகனங்களையும், 7 பேருக்கு ரூ.53, 200 மதிப்பில் 3-சக்கர வாகனங்களும், ரூ.45,000 மதிப்புள்ள நவீன செயற்கை கை ஒருவருக்கும், 10 பேருக்கு ரூ.57,500 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 8 பேருக்கு பல்வேறு உதவி திட்டங்களின் கீழ் ரூ.1,45,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.5,93,200 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவா் பொ. சந்திரசேகா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஜெய்னூ லாப்தீன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தா் ராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT