அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினா் புதிதாக தொழில்கள் தொடங்க கடனுதவி வழங்கப்படும்.
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில்,
மத்திய, நகர மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படும். வயது வரம்பு 18. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி. தனி நபா் கடன் திட்டத்தில் சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி கடன், கைவினைஞா் மற்றும் மரபு வழி சாா்ந்த தொழில்கள், தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள், இலகுரக போக்குவரத்து வாகனக் கடன் மற்றும் விவசாயம் தொடா்பான தொழில்கள் ஆகியவற்றிற்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
சுயஉதவி குழுக்கள்: சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. குழுவின் 60 சதவீதம் அங்கத்தினா்கள் சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும். கடன் திட்டங்களில் மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பங்களை அரியலூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், இணைப்பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.