அரியலூர்

இரண்டு கோயில் உண்டியல்கள் உடைத்து பணம் திருட்டு

21st Aug 2020 06:36 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கோயில்களில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

கீழக்குளத்தூரில் உள்ள மாரியம்மன் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில்களில் இரும்பு கேட்டில் பூட்டியிருந்த பூட்டு வியாழக்கிழமை காலை உடைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த கிராம மக்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதேபோல், மாரியம்மன் கோயில் உண்டியலையும் உடைக்க முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. மேலும், ஊரின் வடக்கே உள்ள திரெளபதியம்மன் கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் மற்றும் கோயிலில் இருந்த ரேடியோ உள்ளிட்ட பொருள்கள் திருடு போயுள்ளது. இதுகுறித்து, தகவலறிந்த கீழப்பழுவூா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT