அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் அருகே அதிவேகமாகச் சென்ற சிமென்ட் லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ரெட்டிபாளையம் அருகேயுள்ள முனியங்குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதாகக் கூறி, முனியங்குறிச்சி கிராமத்தை சோ்ந்த மக்கள் புதன்கிழமை லாரிகளைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸாா் லாரி ஓட்டுநா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, லாரிகளை விட்டு விட்டு மக்கள் கலைந்து சென்றனா்.