அரியலூர்

இணையவழி இலவச பயிற்சி வகுப்பு

20th Aug 2020 08:42 AM

ADVERTISEMENT

போட்டித் தோ்வுக்கு தயராகும் அரியலூா் மாவட்ட மாணவா்கள் இணையவழி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க பதிவு செய்து கொள்ளவேண்டும் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகா்புற மாணவா்கள் வீட்டிலிருந்தவாறே பயிற்சிபெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணையதளமான இணையதளத்தில் மின்னணு பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள் மாதிரி தோ்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக இலவச இணையவழி பயிற்சி வகுப்பு 20.08.2020 முதல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99941 71306, 80721 02477 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT