அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
இந்த ஏலத்தில் மத்திய அரசின் இந்திய பருத்தி கழகம், அரியலூா் கும்பகோணம், செம்பனாா் கோவில் மற்றும் விழுப்புரம் பகுதிகளைச் சோ்ந்த 452 விவசாயிகள் கலந்து கொண்டதாகவும், 1,345.58 குவிண்டால் பருத்தி ரூ.68 லட்சத்து 99 ஆயிரத்து 576-க்கு விற்பனையானதாக அதன் செயலாளா் ஜெயக்குமாா் தெரிவித்தாா். இந்திய பருத்திக் கழகத்தால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 550-க்கும், தனியாா் வியாபாரிகள் ரூ.4,339-க்கும் அதிகபட்சமாக கொள்முதல் செய்தனா். மொத்தம் விற்பனையான 1,345. 58 குவிண்டாலில் 1,051.46 குவிண்டால் பருத்தியை இந்திய பருத்திக்கழகம் கொள்முதல் செய்தது.