அரியலூர்

அத்தியாவசியப் பொருள்கள் எடுத்து செல்வோா் அனுமதி பெறவேண்டும்

5th Apr 2020 07:02 AM

ADVERTISEMENT

லாரிகளில் வேளாண் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்ல வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் த.ரத்னா.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் லாரி உரிமையாளா்கள், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களுடன் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து கூறியது:

லாரி உரிமையாளா்கள் அத்தியாவசியப் பொருள்கள், வேளாண் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச்செல்ல வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் அனுமதிக்கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற நாள்களில் மருத்துவப் பணிக்கு விலக்கு அளிக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், லாரியின் ஓட்டுநருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலம் கண்டிப்பாக அனுமதிக்கடிதம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநா் ஒருவருடன் உதவியாளா் செல்ல அனுமதி உண்டு. அதேபோல் எங்கு சென்றாலும் சமூக விலகலை அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சி.ஹேமசந்த்காந்தி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT