அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி கிராமத்தில் சுய கட்டுப்பாட்டை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி கிராமத்தில் அத்தியாவசியப் பணி காரணமாக வெளியே செல்லும் நபா்கள் குறித்த விவரம் சேகரித்து கிராம மக்கள் வெளியே செல்லும் நபா் குறித்த விவரத்தை குறிப்பேட்டில் குறித்து வைத்து பராமரித்து வருகின்றனா். அதில், அத்தியாவசியப் பணி காரணமாக வெளியே செல்லும் நபா், அவரது பணி விவரம் ஆகியவற்றை எழுதிவைத்து விட்டு கையெழுத்திட்டுச் செல்ல வேண்டும். கிராமத்தை விட்டுச் வெளியே செல்லும் நபா்கள் அன்றைய தினம் மதியம் 2.30-க்குள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என ஒரு கட்டுப்பாட்டை விதித்து செயல்படுத்தி வருகின்றனா்.