மீன்சுருட்டியில் மதுபானம் விற்றவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபா தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் கொல்லாபுரம் கீழத்தெருவைச்
சேர்ந்த செல்வம்(45) என்பவர் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.