வி.கைகாட்டி அருகே ஏரிக்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
வி.கைகாட்டி அருகேயுள்ள நாயக்கர்பாளையத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் ஆனந்த்(19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பர்கள் கார்த்திக் மற்றும் இளையராஜா ஆகியோருடன் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார்.
ஆழமான பகுதிக்கு சென்ற ஆனந்த் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் ஏரியில் இறங்கி ஆனந்தின் உடலை மீட்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.