திருமானூர் கொள்ளிடக்கரை பரிசல்துறைத் தெருவிலுள்ள வரம் தரும் ஆஞ்சநேயர் கோயிலில், வருடாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கு நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இந்த அபிஷேகம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் சிறப்பு யாகமும், அதைத் தொடர்ந்து மஞ்சள், சந்தனம், மாவு, திரவியப்பொடி, பழச்சாறு, தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர் மற்றும் பால் ஆகியவற்றால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், அதிமுக ஒன்றியச் செயலர் குமரவேல், சமூக ஆர்வலர் ராஜேந்திரன், சுள்ளங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவர் சேகர் உள்ளிடோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.இரவு மின்னொளி அலங்கார வாகனத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கார்த்திகேயன், மேகலா, சீமான், அயோத்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.