அரியலூர்

செந்துறையில் அடிப்படை வசதி கோரி  ஆர்ப்பாட்டம்

10th Sep 2019 07:53 AM

ADVERTISEMENT

அடிப்படை வசதி கோரி அரியலூர் மாவட்டம் செந்துறையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை புறவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க வேண்டும். செந்துறையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடனே கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். 100 நாள் வேலை வழங்க வேண்டும். சென்னை விரைவு ரயில், செந்துறையில் நின்று செல்ல வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார். திமுக சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா. சந்திரசேகர்,  மற்றும் காங்கிரஸ், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT