அரியலூர்

ஊட்டச் சத்து விழிப்புணர்வுக் கண்காட்சி

10th Sep 2019 07:53 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்  சார்பில் ஊட்டச் சத்து விழிப்புணர்வு கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊட்டச் சத்து மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தொடக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் சத்தான உணவுப் பொருள்கள்,காய்கறிகள்,பயறுவகைகள் உள்ளிட்டவை இடம் பெற்றன.
இதை மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்கள்,அரசு அலுவலர்கள் ஆகியோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இவர்களுக்கு மேற்கண்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT