அரியலூர்

வேலை தேடுபவர்கள் கவனத்துக்கு...

7th Sep 2019 10:44 AM

ADVERTISEMENT

அனைத்து மாவட்ட வேலைநாடுநர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்குரிய பொருத்தமான தொழில்நெறியைத் தேர்வு செய்ய உதவிடும் வண்ணம், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் "மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்' என்னும் புதிய அலுவலகம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
இவ்வலுவலகமானது உள அளவை சோதனைகள், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு முகாம்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கென பிரத்யேக ஆலோசகர்கள் மற்றும் உயர்ரக வசதிகளை இம்மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் கொண்டுள்ளது.
இச்சேவைகளைப் பெற விருப்பமுடைய பணிநாடுநர்கள், மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, டான்சி அலுவலகம் முதல் தளம், கிண்டி காவல் நிலையம் அருகில், திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலோ அல்லது 044-22500134 என்ற தொலைபேசி எண் அல்லது  ‌s‌t​a‌t‌e​c​a‌r‌e‌e‌r​c‌e‌n‌t‌r‌e@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற இணையதள முகவரி மூலமாக இம்மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT