அரியலூர்

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

7th Sep 2019 10:17 AM

ADVERTISEMENT

அரியலூர் அருகே கல்லூரி மாணவர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் தலைக்கவசம் அணிந்து செல்வதின் அவசியம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், செந்துறை ரவுண்டானா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவர்களிடம், இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கண்டிப்பாக தலைக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.  சாலை விதிமுறைகள கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது, சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT