அரியலூர்

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

மும்முனை மின்சார இணைப்பு கோரி விண்ணப்பித்து, 4 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக  மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் மும்முனை மின்சாரத்தை வழங்கி, விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அச்சங்க நிர்வாகிகள், தேரடியில் இருந்து ஊர்வலமாக  சென்றுஅண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் ஆர்.ராஜேந்திரன், மாவட்ட செயலர் எம்.ராஜி, துணைச் செயலர் ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT