அரியலூர்

குடிமராமத்துப் பணி: ஆட்சியர் ஆய்வு

7th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், மல்லூர் கிராமத்திலுள்ள மாணிக்க வாசகர் ஓடை மற்றும் நைனேரியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஆட்சியர் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
மாணிக்கவாசகர் ஓடையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வடிகால், பழுதடைந்துள்ள அணைக்கட்டு ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் மல்லூர் நைனேரியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் ஏரியின் கரைகள், வரத்துவாய்க்கால், வடிகால் மற்றும் ஏரியிலுள்ள 2 மதகுகளும் புனரமைக்கப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வை.வேல்முருகன், உதவி பொறியாளர் டி.மருதமுத்து மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT