அரியலூர்

அரியலூர்: செப்.11-இல் ரோலர் ஸ்கேட்டிங்

7th Sep 2019 10:45 AM

ADVERTISEMENT

அரியலூரில் செப். 11ஆம் தேதி ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெறவுள்ளது என்று ரோலர் ஸ்கேட்டிங் சங்க துணைச் செயலர் பி.ஆர்.கண்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
குவார்டு இன்லைன், ஆர்டிஸ்டிக், ரோலர் ஹாக்கி, இன்லைன் ஹாக்கி, ஸ்லாலோம், அல்பைன், டவுன்ஹில், ரோலர் டெர்ப் ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியாக போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் மாநில போட்டிக்கு தகுதித் தேர்வும் நடக்க உள்ளது.
பங்கேற்க விரும்புவோர் ‌w‌w‌w.‌t‌n‌r‌s​a.​c‌o‌m என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு செந்துறை சாலையிலுள்ள நோபல் கார்னரை அணுகலாம். 9944357027, 9942989081 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT