அரியலூர்

டிராக்டர் பறிமுதல்: விவசாயி தற்கொலை முயற்சி

4th Sep 2019 08:49 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே வங்கியில் வாங்கிய கடன் தவணை தொகையை கட்டாததால்  டிராக்டரை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்ததையடுத்து விவசாயி செவ்வாய்க்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
திருமானூர் அருகேயுள்ள கீழ வண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (50). விவசாயி. இவர், அரியலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கி விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இவர் இரண்டு மாத தவணை தொகை செலுத்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் 2 மாத தவணைத் தொகையை செப். 6 ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும் என்றும், தவறினால்  டிராக்டர் பறிமுதல் செய்யப்படும்  என்று வங்கி நிர்வாகம் கடந்த 30 ஆம் தேதி தேவேந்திரனுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தேவேந்திரன் வீட்டுக்கு வந்த வங்கி அதிகாரிகள் அவரது டிராக்டரைப் பறிமுதல் செய்தனர்.
இதனால் விரக்தியில் இருந்த தேவேந்திரன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். தவணை தொகை தேதி முடிவதற்குள் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் விவசாயின் டிராக்டரை பறிமுதல் செய்திருப்பது அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT