அரியலூர்

சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

4th Sep 2019 08:50 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன், நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசர் மற்றும் சிமென்ட் ஆலை பிரதிநிதிகள், போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிமென்ட் ஆலைகள் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களுக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது, சாலை சந்திப்புகளில் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க கூடுதலாக தடுப்பு அரண்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, வி.கைகாட்டி மற்றும் செந்துறை பகுதிகளில் சிமென்ட் ஆலை,ரெட் கிராஸ் சார்பில் அவரச ஊர்தி வாகனங்கள்  இயக்குவது, இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம தலைக்கவசம் அணிந்து செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT