அரியலூர்

சட்ட விரோதமாக மின் கழிவுகளை கையாளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

4th Sep 2019 09:15 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டத்தில் உரிய அங்கீகாரமின்றி மின் கழிவுகளை கையாளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் டி.ஜி.வினய். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
மின்னணு கழிவு மேலாண்மை விதிகள் 2016 அட்டவணை 1-இன் படி, மின் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளர்கள், தங்களது சாதனங்களை விநியோகஸ்தர்கள்/ சில்லரை விற்பனையாளர்கள்/ ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்தபின், அப்பொருள்களின் ஆயுள்காலம் முடிந்தவுடன் தயாரிப்பாளர்களின் நீடித்த பொறுப்பு என்ற அடிப்படையில் அவற்றினை திரும்பப்பெற்று மறுசுழற்சிக்கு அனுப்புவது அவர்களது கடமையாகும். எனவே, மின் மற்றும் மின்னணு பொருள்கள் தயாரிப்பாளர்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. 
தவறும் பட்சத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
உற்பத்தி, சீரமைக்கும், பிரித்தெடுக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகள்: மின்னணு கழிவு மேலாண்மை விதியின் கீழ், மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம், அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். 
மின்னணுக் கழிவு சேகரிப்பு மையங்கள்: மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு செய்யும் மையங்கள், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். 
இதில், மின்னணுக் கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சியாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். 
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் நகல், மின்னணு கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகள் பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளின் விபரங்கள் w‌w‌w.‌t‌n‌p​c​b.‌g‌o‌v.‌i‌n  என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT