அரியலூர்

கீழகாவட்டாங்குறிச்சி ஏரி தூர்வாரும் பணிகள் தொடக்கம்

4th Sep 2019 08:49 AM

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள  சின்ன ஏரி தூர்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
கீழகாவட்டாங்குறிச்சியில் 42 ஏக்கரில் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரி பராமரிக்கப்படாமல் இருந்ததால் சம்பு, காட்டு தாவரங்கள் முளைத்து காடுபோல் காணப்பட்டதால், அவற்றை அகற்றி தூர்வாரி நடவடிக்கை எடுக்குமாறு விவசாய சங்கத்தினர் மாவட்ட நிர்வாகம், ஒன்றிய அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனராம். 
இதையடுத்து, சின்ன ஏரியை தூர்வார ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஏரி தூர்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  திருமானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் ஏரியை தூர்வாரும் பணியைத் தொடக்கி வைத்தார். கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர், நீர் நிலை ஆர்வலர் தியாகராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் மணியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிடோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT