அரியலூர்

அனுமதியின்றி சுவரொட்டி  ஒட்டியவர் மீது வழக்கு

4th Sep 2019 08:49 AM

ADVERTISEMENT

அரியலூர் அருகே அரசு அலுவலக சுவரில் அனுமதியின்றி சுவரொட்டி ஓட்டியவர் மீது  போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
அரியலூர் அருகே கோப்பிலியன் குடிக்காடு கிராமத்தில் உள்ள  நியாய விலைக் கடையின் சுவரில் தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கம் தொடர்பான சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதையறிந்த கயர்லாபாத் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் மகன் ரவிச்சந்திரன் என்பவர் அந்த சுவரொட்டியை ஒட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT