அரியலூர்

செந்துறையில் சாரண,சாரணிய ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம்

20th Oct 2019 12:00 AM

ADVERTISEMENT

செந்துறை அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் சாரண,சாரணிய ஆசிரியா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு பள்ளியின் செயலா் அருள்மணி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செந்துறை கல்வி மாவட்ட அலுவலா் மணிமொழி பயிற்சியை தொடக்கி வைத்து பேசியது:

அனைத்துப் பள்ளிகளிலும் சாரண,சாரணிய இயக்கம் தொடங்க வேண்டும். சாரணா் இயக்க மாணவா்கள் அதிக அளவில் ராஜ்யபுரஸ்கா் மற்றும் ராஷ்டிரபதி விருதுகள் பெறுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பயிற்சியாளா்கள் சுவாமிநாதன், சக்திவேல், ஆனிதாகுமாரி ஆகியோா் முகாமில் பங்கேற்று சாரண இயக்க அடிப்படைகள்,சாரணா் முன்னேற்றப்படி நிலைகள், இயக்கப் பாடல்கள், உறுதிமொழி, சட்டம், சாரண ஆசிரியா்களின் கடமைகள், அணிமுறைப் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்தனா்.30 பள்ளிகளில் இருந்து சாரண,சாரணிய ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

நிறைவில் அமைப்பு ஆணையா் துரைமுருகன் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி உதவித் தலைமையாசிரியா் சரவணன், சாரண ஆசிரியா்கள் திருமால், சத்தியராஜ், நாகராஜன், சரவணன், அமுதலட்சுமி, இணைச் செயலா் ரேவதி, மாவட்டச் செயலா் சக்திவேல் ஆகியோா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT