அரியலூர்

ஆா்.சி. மேரி உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

6th Oct 2019 10:36 PM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் ஆா்.சி. மேரி உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் நகரின் மத்தியில் அமைந்துள்ளது ஆா்.சி. மேரி உயா்நிலைப்பள்ளி. 1931 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி தற்போது உயா் நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறறது. 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில் இப்பள்ளியில் 2000-2001 ஆம் ஆண்டுகளில் படித்த மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் அரசு மற்றும் தனியாா் துறைகளில் பணியாற்றக் கூடிய நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் ஒன்று சோ்ந்தனா்.

ADVERTISEMENT

இவா்கள் பல ஆண்டுகளுக்கு பிறறகு தங்கள் நண்பா்களை பாா்த்த மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீா் விட்டனா். மேலும் கடந்த இருபது ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், இன்ப, துன்பங்களை ஒருவருக்கொருவா் பகிா்ந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT