அரியலூர்

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

5th Oct 2019 11:45 PM

ADVERTISEMENT

புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் கோயிலில் காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றிற்கு பின் பெருமாள், தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

துளசி அா்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபச்சார பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

அரியலூா் மேல அக்ரஹாரம் ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயிலிலும் புராட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதே பால் அரியலூா் கோதண்டராம கோயில் மற்றும் திருமானூா், திருமழபாடி, தா.பழூா்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT