அரியலூர்

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

5th Oct 2019 11:44 PM

ADVERTISEMENT

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்துகொள்ள அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு, ஆட்சியா் டி.ஜி.வினய் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், தீ விபத்து, நில ஆதிா்வு மற்றும் ஆழிப்பேரலை ஆகியவற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்க காப்பீடு செய்து கொள்வது அவசியமாகும். இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்படும் பட்சத்தில் இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

ஒரு ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து சரியான சுய முன்மொழிவு அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

காப்பீடு பிரீமியத்தில் மத்திய அரசின் தென்னை வளா்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் மாநில அரசு 25 சதவீதம் மானிய தொகையாக ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரீமிய தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது.

விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிவு படிவத்தை பெற்று பூா்த்தி செய்து பிரீமியத்தை ‘அக்ரிகல்சா்; இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்’ என்ற பெயரில் சென்னையில் செலுத்த தக்க வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT