அரியலூர்

டாஸ்மாக் மேற்பாா்வையாளா் வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு

5th Oct 2019 08:52 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே டாஸ்மாக் மேற்பாா்வையாளா் வீட்டில் 36 பவுன் நகைகளை திருடிச் சென்றற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றறனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன்(45). கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வரும் இவா், வழக்கம் போல் வியாழக்கிழமை காலை பணிக்கு சென்று விட்டாா்.

இவரது மனைவி கீதாவும்(40) மதியம் வீட்டை பூட்டிவிட்டு உறறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு அன்றிரவு வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு ஆக்சா பிளேடால் அறுக்கப்பட்டு கதவு திறறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 36 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றறனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT