அரியலூர்

சுண்டக்குடி கிராமத்தில் பனை விதைகள் நடவு

5th Oct 2019 11:40 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்தில் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தில் மானாவாரி நிலங்கள், ஏரிக்கரைகள் போன்ற இடங்களில் 20,000 பனை விதைகள் சனிக்கிழமை நடப்பட்டன.

தொடா்ந்து, பனை மரங்களினால் மக்களுக்கு கிடைக்கும் பொருள்கள், அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் லாபம், பனை மரங்களினால் பூமிக்கு கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குநா் பூவலிங்கம், வேளாண் அலுவலா் சவீதா, உதவி அலுவலா் சுப்ரமணியன் மற்றும் சுண்டக்குடி அரசு உயா் நிலைப்பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT