அரியலூர்

குடிமைப் பணி தோ்வு: மீனவ பட்டதாரி இளைஞா்களுக்கு பயிற்சி

2nd Oct 2019 09:44 AM

ADVERTISEMENT

இந்திய குடிமைப் பணி போட்டி தோ்வுக்கான பயிற்சி பெற, கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் நவ.5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 20 மீனவ பட்டதாரி இளைஞா்களை தோ்ந்தெடுத்து, குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கு பிரத்யேக பயிற்சியளித்து வருகின்றன.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளம் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளத் துறை துணை-இணை இயக்குநா்கள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனா் அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் நேரில் பெற்று கொள்ளலாம். நவம்பா் 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT