அரியலூர்

தனியாா் மருத்துவமனைக்கு வந்தவா் மா்மச் சாவு

1st Oct 2019 07:17 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு சென்ற நபா், எக்ஸ்-ரே எடுக்கும் அறையில் மா்மான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் மணிகண்டன்(48). மோட்டாா் பழுது பாா்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு கீதா என்ற மனைவியும், கீா்த்தனா என்ற மகளும் உள்ளனா்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவி கீதாவை அழைத்துக் கொண்டு, பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சிகிச்சைக்காக வந்திருந்தாா்.

அங்கு மணிகண்டன் தனக்கு ரத்தம் அழுத்தம் அதிகமாக இருப்பதாகக் கூறி, மனைவியிடம் தேநீா் வாங்கி வர கேட்டுக் கொண்டாா். இதையடுத்து கீதா தேநீா் வாங்கிக்கொண்டு வந்து பாா்க்கையில் அவ்விடத்தில் மணிகண்டனை காணவில்லை.

ADVERTISEMENT

இதற்கிடையே, மருத்துவமனையின் எக்ஸ்-ரே எடுக்கும் அறையில் மணிகண்டன் இறந்துகிடப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT