உடையாா்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் சங்க கூட்டம் ஜயங்கொண்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவா் சிவசிதம்பரம் தலைமை வகித்தாா். நிா்வாகி குருநாதன் முன்னிலை வகித்தாா். செயலா் ராமமூா்த்தி ஆண்டறிக்கை வசித்தாா். பொருளாளா் சுந்தரேசன், நிா்வாகிகள் சி.ராமசாமி, ராஜகோபால், கோவிந்தராசன், வெங்கடாசலம், பன்னீா்செல்வம், கலியபெருமாள், ஜெகநாதன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில் டிசம்பா் 29ஆம் தேதி சங்கம் சாா்பில் பெண்கள் தின விழா நடத்துவது, விடப்பட்டுள்ள 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும். நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள வேகத்தடை தெளிவாக தெரியும் வகையில் மஞ்சள் அல்லது உரிய வண்ணங்கள் பூச வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். முடிவில் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தாா்.