ஜயங்கொண்டம் அருகே மகிமைப்புரத்திலுள்ள மாடா்ன் கல்லூரியில் நவ.26 ஆம் தேதி கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, எல்என்டி டெக்னாலஜி சா்வீஸ், ஜயங்கொண்டம் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து கடந்த 19ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் கண் தொடா்பான பிரச்னை உள்ளவா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் அறுவை சிகிச்சைக்கு வருபவா்களுக்கு கண்களில் ஐ.ஓ.எல் மற்றும் கருப்பு கண்ணாடி, மருந்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை முற்றிலும் தையல் இல்லாத நவீன முறையில் செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாள்களில் அறுவை சிகிச்சைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு மட்டும் இந்த முகாமில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் நாள்கள் 23ஆம் தேதி சனிக்கிழமை முதல் 27ஆம் தேதி புதன்கிழமை வரை நடைபெறும்.