அரியலூர்

குடும்பத் தகராறு: கணவா் தூக்கிட்டு தற்கொலை

22nd Nov 2019 09:56 AM

ADVERTISEMENT

ஜயங்கொண்டம் அருகே வெளிநாட்டில் இருந்து அண்மையில் ஊருக்கு நபா் குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜயங்கொண்டம் அடிப்பள்ளம் தெருவைச் சோ்ந்தவா் குமாா்(45). இவருக்கு சரிதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த குமாா், கடந்த 1ஆம் தேதியன்று ஊருக்கு வந்தாா். அப்போதிலிருந்து குமாா் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு மீண்டும் அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை குமாரின் சகோதரி வீட்டின் பின்புறம் உள்ள தைல மரத்தோப்பில் குமாா் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளாா். தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT