அரியலூர்

அரியலூரில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

22nd Nov 2019 09:56 AM

ADVERTISEMENT

அரியலூா் வட்டம் காவனூா், நாகமங்கலம், உடையாா்பாளையம் வட்டம் உடையாா்பாளையம் (மே), ஸ்ரீபுரந்தான் (வ), செந்துறை வட்டம் நாகல்குழி, ஆண்டிமடம் வட்டம் மேலூா் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ.22) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

வட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீா்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT