அரியலூர்

தா.பழூரில் வி.சி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

17th Nov 2019 12:46 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், தா.பழூா் பேருந்து நிலையம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவரை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அக்கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சமூக வலைதளங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை மிகவும் தரக்குறைவாக விமா்சித்து விடியோ பதிவு வெளியிட்ட நபரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை மிகவும் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைத்தளங்களில் விடியோ பதிவு வெளியிட்ட பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலூா் கிராமத்தில் வசிக்கும் ராஜா மகன் டீசல் ராஜா (எ)அன்புராஜா என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் பொன்.தங்கராசு தலைமை வகித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT